சமீபகாலமாக போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகி வருகிறது. அதாவது நடிகை ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோல் போன்றோரின் முகங்களை வேறு சிலரின் முகங்களோடு எடிட்டிங் செய்து மோசமான போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் பல விமர்சனங்களை சந்தித்த நடிகைகள் இதுகுறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். அதற்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு செயலியை பயன்படுத்தி இதுபோன்ற போலி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு இணையதளங்களில் வெளியாகி உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையை தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடிக்கும் இது போன்ற போலி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களோடு சேர்ந்து கார்பா நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்தேன் இது போன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது போன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கிறது மேலும் இது குறித்து சாட்ஜிபிடி குழுவினருடன் பேசி எச்சரித்துள்ளேன்! தொழில்நுட்பம் என்பது பொறுப்புடன் கையாளப்பட வேண்டிய ஒன்று ஊடகங்களும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
Source : The Hindu Tamilthisai