சூரிய மின்சக்தி உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா...

Update: 2024-05-09 15:28 GMT

சூரிய சக்தி உற்பத்தியாளர் வரிசையில் ஒன்பதாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா. அதாவது, உலக மின் ஆற்றல் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகின்ற எம்பர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 

2015 இல் சூரிய சக்தி உற்பத்தியாளர்கள் வரிசையில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் இருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு இதில் நான்காவது இடத்திற்கு முன்னேறி ஜப்பானை பின்னுக்கு தள்ளியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், உலகின் எதிர்கால மின்சார சக்தியின் ஆதாரமாக புதுப்பிக்கத்தக்க மின்சார துறை தான் இருக்கும் என்பது முன்பாகவே கணிக்கப்பட்டது, அதுவே தற்போது உண்மையாகி வருகிறது. குறிப்பாக சூரிய ஒளி மின்சார துறையானது எதிர்பாராத வகையில் அதிவேக வளர்ச்சியை கண்டு வருகிறது என்று எம்பர் அமைப்பின் ஆசிய திட்ட இயக்குனர் ஆதித்யா லொல்லா தெரிவித்துள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News