மறந்துராதீங்க ரிட்டன் பைல் பண்ணவங்களுக்கு முக்கிய செய்தி!!

Update: 2025-09-09 09:14 GMT

 எல்லா ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்வது ஜூலை 31 தேதிக்குள் நிறைவடைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய படிவம் புதிதாக மாற்றப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இதற்குரிய இணையதளமும் சிறிது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக மாற்றப்பட்ட படிவம் காலதாமதத்தோடு வெளியிட்டதால் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்வது இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தான் கடைசி நாளாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ஐடிஆர்-1 ன் படி தங்களுடைய பணத்தை திரும்ப பெறுவதற்கு தாக்கல் செய்யலாம். மேலும் ஆதாய வரி தாக்கல் செய்யும்பொழுது பழைய மற்றும் புதிய வரி விதிமுறைகளை அறிந்து கொள்வதற்கு சில விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏழு வகையான ஆதாய வரி அடுக்கு படிவங்கள் இருந்தாலும் ஒன்றோடு வேறுபாடு உள்ளதாக இருக்கும்.

சம்பள வருமானம் உள்ளவர்கள் மட்டுமே ஐடிஆர் 1 பயன்படுத்த முடியும். இதனை தாக்கல் செய்வதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற சில குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களை பயன்படுத்தி தாக்கல் செய்து கொள்ளலாம். முக்கியமாக வங்கிக் கணக்கின் பெயர் பான் கார்டுடன் பொருந்தவில்லை என்றால் பணத்தை திரும்பப் பெற முடியாமல் போகும் எனவே கணக்கு விவரங்களை கவனமாக சரி பார்ப்பது முக்கியமாகும். 


Tags:    

Similar News