தீபாவளியை முன்னிட்டு பயன்பாட்டிற்கு வர போகும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்!!
வந்தே பாரத் ரயில் இப்பொழுது பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக இந்திய ரயில்வே படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ராயிலை இயக்கப் போவதாக தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இந்த ரயிலானது டெல்லியில் இருந்து பாட்னா வரை இயங்கப் போவதாகவும் வரும் தீபாவளியை முன்னிட்டு இயங்க இருப்பதால் இந்த செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக பாட்னாவிற்கு செல்லும் என்றும் ஏற்கனவே இருக்கும் பயண நேரத்தை விட மிகவும் குறைவான நேரத்தில் செல்லும் என கூறப்படுகிறது. தினமும் இரவு எட்டு மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்பட்டு டெல்லியை மறுநாள் காலை 7.30 மணிக்கு வந்தடைந்து அதே போல டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு புறப்படும் என்று கூறுகின்றனர்.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜஸ்தானி ரயில் கட்டணத்தை விட வந்தே பாரத் ரயில் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும். தொலைதூரம் பயணிக்கும் பயணிகளுக்கு பயணத்தை எளிமையாக்குவதற்காக படுக்கை வசதியுடன் கூடிய இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முதல் வகுப்பில் ஏசி, குளியலறை என தொடங்கி பலவிதமான வசதிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் முதல் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.