சுதந்திர தினத்தன்று காலிஸ்தான் கொடியை ஏற்றியவர்கள் மீது N.I.A வழக்குப் பதிவு.!

சுதந்திர தினத்தன்று காலிஸ்தான் கொடியை ஏற்றியவர்கள் மீது N.I.A வழக்குப் பதிவு.!

Update: 2021-02-12 11:16 GMT

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பஞ்சாபில் உள்ள துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசியக் கொடியை இழிவுபடுத்தி காலிஸ்தான் கொடியை ஏற்றினர். அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு SFJ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. 

மேலும் அவர்கள் மீது இந்தியத் தண்டனை சட்டம், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் மற்றும் அவமதிப்பு தடுப்பு சட்டம் முதலியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் இந்தர்ஜித்  சிங், ஜஸ்பல் சிங், ஆகாஷ்தீப் சிங், ஜக்விந்தர் சிங், குர்பத்வான்ட் சிங் பன்னுன் மற்றும் ஹார்ப்ரீத் சிங் ராணா ஆகியோர் ஆவர். 
 

மேலும் விசாரணையில் இவர்கள் அனைவரும் SFJ அமைப்பில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தேசியக் கொடியைக் கிழித்து காலிஸ்தானிய கொடியை ஏற்றியவர்கள் இந்தர்ஜித்  சிங், ஜஸ்பல் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் ஆவர். அவர்கள் அந்த சம்பவத்தைப் பதிவு செய்து யூ-டூப், அமெரிக்க ஊடகங்கள் போன்றவற்றில் பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்துக்குப் பிறகு குர்பத்வான்ட் சிங் பன்னுன் மற்றும் ஹார்ப்ரீத் சிங் ராணா ஆகியோர் இந்தர்ஜித்  சிங், ஜஸ்பல் சிங் ஆகியோருக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்களும் பதிவு செய்துள்ளது NIA. இது தொடர்பான விசாரணையை NIA தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. 

Similar News