அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரம்: 50 இடங்களில் NIA சோதனை!
பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய டெல்லி உட்பட 50 இடங்களில் NIA சோதனை.
இந்திய மற்றும் வெளிநாடுகளை மையமாகக் கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு இடையே வளர்ந்து வரும் தொடர்பை உடைக்கும் விதமாக டெல்லி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு என்று அழைக்கப்படும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். பயங்கரவாத செல்களின் ஈடுபட திட்டமிட்டு உள்ளது குறித்து பலியான தகவல்களின் பெயரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சோதனையில் லாரன்ஸ் உள்ளிட்ட பல அமைப்பு மற்றும் கும்பல்கள் தொடர்புடையவர்கள் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது சில இடங்களில் துப்பாக்கிகளும், வெளிநாட்டு மருந்துகளும் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 12ஆம் தேதி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி ஆகியும் இடங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் NIA சோதனையை மேற்கொண்டது.
அதை போல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு டெல்லி போலீஸ் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இது குறித்து NIA அதிகாரி கூறுகையில், பல கும்பல்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்து தப்பி பாகிஸ்தான், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று விட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: News