நிபா, கொரோனா, அடுத்து புது வகையான மலேரியா.. கேரள அமைச்சரின் ட்விட்.. அச்சத்தில் மக்கள்.!

நிபா, கொரோனா, அடுத்து புது வகையான மலேரியா.. கேரள அமைச்சரின் ட்விட்.. அச்சத்தில் மக்கள்.!

Update: 2020-12-11 15:54 GMT

கேரளா மாநிலத்தில் ‘பிளாஸ்மோடியம் ஓவல்’ எனும் புது வகையான மலேரியா நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கேரளாவில், ‘பிளாஸ்மோடியம் ஓவல்’ என்ற புதிய வகை மலேரியா நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய், சூடான் சென்று திரும்பி வந்த ராணுவ வீரரிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதால் இந்த நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், இந்தியாவில் பாதிக்கப்பட்ட முதல் நபர், கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். அது போன்று 2018ம் ஆண்டில் பரவிய நிபா வைரசும், பாதிக்கப்பட்ட முதல் நபர், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இதனால் கேரளாவில் தொடங்கும் நோய் நாடு முழுவதும் வேகமாக பரவி விடுகிறது என்று பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Similar News