கேரளாவில் மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் நாட்டிலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது கேரளாவாகத்தான் இருக்கும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கோழிக்கோடு மாவட்டம், சூலூரை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் கடந்த 1ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் திறன் உடையது என்பதால், சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புகளில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalamurai
https://www.puthiyathalaimurai.com/newsview/114843/Nipah-returns-to-Kerala-12-year-old-dead-in-Kozhikode