சதி அம்பலமானது! கார்நாடக ஹிஜாப் சர்ச்சையை திட்டமிட்டே உருவாக்கிய இஸ்லாமிய அமைப்பு: 35 ஆண்டுகளாக யாரும் ஹிஜாப் அணியவில்லை!

no girl was wearing hijab, they came with CFI lawyer

Update: 2022-02-11 15:33 GMT

இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைகளில் சீருடை விதிகளை மீறி இஸ்லாமிய உடையை அணிவதில் பிடிவாதமாக இருந்ததாக உடுப்பி கல்லூரி முதல்வர் ருத்ரே கவுடா தெரிவித்தார். 35 ஆண்டுகளாக யாரும் ஹிஜாப் அணிய வேண்டி கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார். . ஹிஜாப் போன்ற மத உடைகளை அணிய, பள்ளி வளாகத்தில் அனுமதி உண்டு. ஆனால் வகுப்பறைக்குள் அனுமதியில்லை என்றார்.

இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கடந்த 35 ஆண்டுகளாக வகுப்பறையில் ஹிஜாப் அணிய அனுமதி இல்லை. அதை அணிந்து கல்லூரிக்கு வர அனுமதிக்கிறோம் ஆனால் வகுப்பறைக்குள் அணிந்து வரக்கூடாது. வகுப்பு நேரத்தில், அனைத்து மாணவர்களும் ஹிஜாப் இல்லாமல் சீருடையில் இருக்க வேண்டும்.  பிரச்சனையை உண்டாக்கிய மாணவிகள் டிசம்பர் 27க்குப் பிறகுதான், வகுப்பறையில் ஹிஜாப் அணிய விரும்புவதாகச் சொன்னார்கள்.

டிசம்பர் 27 அன்று, பெற்றோரை அழைத்து வந்துள்ளனர். பின்னர் மறுநாள் உறவினர்களை அழைத்து வந்துள்ளனர். அடுத்து CFI வழக்கறிஞர் மற்றும் CFI மாணவர் சங்கத்தின் சில உறுப்பினர்களுடன் வந்ததாக பள்ளி முதல்வர் ருத்ரே கவுடா கூறினார்.

மாணவிகளின் நடத்தை மற்றும் கோரிக்கையை பார்க்கும்போது, ​​அவர்கள் CFI போன்ற 'வெளிப்புற அமைப்பினால்' பாதிக்கப்படுகிறார்கள் என்பது தனக்குத் தெளிவாகத் தெரிகிறது என்று உடுப்பி பியு கல்லூரியின் முதல்வர் மேலும் கூறினார்.

கர்நாடகாவின் உடுப்பியில் ஹிஜாப் சர்ச்சையைக் கிளப்பியதில் தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சர்ச்சைக்குரிய மாணவர் பிரிவான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (CFI) என்பது குறிப்பிடத்தக்கது.

Opindia

Tags:    

Similar News