உலகளாவிய பிரச்சினைகளுக்கு இந்தியாவால் மட்டுமே தீர்வு காண முடியும் - ஜெர்மன் அமைச்சர்
உலகளாவிய பிரச்சினைகளுக்கு இந்தியா இல்லாமல் எந்த ஒரு தீர்வை காண முடியாது என்று ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் டோபியாஸ் லிண்ட்னர் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் உதவி இல்லாமல் எந்த ஒரு உலகளாவிய பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. இந்தியாவும், ஜெர்மனியும் தொழில்நுட்பம் மற்றும் கல்வி, பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
எங்கள் நாட்டின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா இருக்கிறது. ஜெர்மனி, இந்திய உறவுகளை ஆழப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் மே 2 முதல் 4 வரை இந்த ஆண்டு வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi