மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக அறிவிப்பு! ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 6 மாத காலத்திற்கு அமல்!

மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக அறிவிப்பு! ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 6 மாத காலத்திற்கு அமல்!

Update: 2020-12-31 09:08 GMT

நாகலாந்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் பதற்றமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் பிரகடனம் செய்தது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை 6 மாதத்திற்கு அமல்படுத்தியது.

1958 ஆம் ஆண்டு ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ் நாகாலாந்தை அடுத்த ஆறு மாதங்களுக்கு 'அனைத்து பகுதிகளும் பதற்றமானவை' என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில், 'சிவில் சக்திக்கு உதவ ஆயுதப்படைகளைப் பயன்படுத்துதல்' அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,  “நாகாலாந்து மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய பகுதி, மிகவும் குழப்பமான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

“ஆகவே, 1958 ஆம் ஆண்டு ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் 3 வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாகாலாந்து மாநிலம் முழுவதையும் 6 மாத காலத்திற்கு 'அனைத்து பகுதிகளும் பதற்றமானவை' என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவிக்கிறது. அந்தச் சட்டத்தின் 2020 டிசம்பர் 30 முதல் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி ஆறு மாத காலத்திற்கு நாகாலாந்தை ‘பதற்றமான பகுதி’ என்று அறிவித்திருந்தது. கடந்த ஆறு மாதங்களாக அம்மாநிலம் AFSPA சட்டத்தின் கீழ் உள்ளது. நாகாலாந்தின் தேசிய சோசலிச கவுன்சில் பிரச்சனையின் இறுதி தீர்வு குறித்து என்.எஸ்.சி.என்-ஐ.எம் உடனான பேச்சுவார்த்தை மேம்பட்ட கட்டத்தில் உள்ளது என்றும், நாகாலாந்து மாநில அரசு மையத்துடன் இணைந்து கிளர்ச்சியாளர்களை சமாளிக்க மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் அளித்து வருவதாகவும் மத்திய அரசு நவம்பரில் கூறியிருந்தது.

கிளர்ச்சிக் குழுக்களைச் சமாளிக்க மத்திய அரசாங்கம் மாநிலங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் கிளர்ச்சிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்துகிறது. ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு போடோஸுடன் தீர்வு ஏற்பட்டுள்ளது, நாகா பிரச்சினையைத் தீர்க்க என்.எஸ்.சி.என் உடன் பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட கட்டத்தில் உள்ளன, ”என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நவம்பர் 6 அன்று தெரிவித்தார்.

பிரதம மந்திரி மோடி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ஆயுதப் பாதையில் சென்ற இளைஞர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 

Similar News