அமைதிக்காகத் தேசியக் கொடி ஏந்தி பேரணிநடத்திய சொந்த பணியாளரைக் கொடூரமாகத் தாக்கிய NSCN-IM.!

அமைதிக்காகத் தேசியக் கொடி ஏந்தி பேரணிநடத்திய சொந்த பணியாளரைக் கொடூரமாகத் தாக்கிய NSCN-IM.!

Update: 2020-12-23 19:20 GMT

 தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடத்தியதற்காக நாகாலாந்தில் கிளர்ச்சி குழுவான NSCN-IM தனது சொந்த பணியாளர் ஒருவரைத் தாக்கியுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த நாகா இளைஞர் ஒருவர் தேசிய கோடி ஏந்தி அமைதி பேரணி நடத்தியதற்காக NSCN-IM பணியாளரால் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். 

அறிக்கையின் படி தாக்கப்பட்ட இளைஞர் மணிப்பூரைச் சேர்ந்த YS மாஷுங்மியி ஆவார். இவர் துணிச்சலாகச் செய்த முயற்சி பார்ப்பவருக்குத் தேசபக்தியாக இருந்தாலும் அவர்கள் அதைச் சட்டவிரோத செயலாகவே கருதுகின்றனர். இவர் இந்த பேரணியை டிசம்பர் 8 இல் டிமாபுர் பகுதியிலிருந்து தொடங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்து நாகாலாந்து முழுவதும் தேசியக் கொடி ஏந்தி அமைதி, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையைப் போன்றவற்றைப் பரப்புவதற்காக இந்த பயணத்தைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் சமீபத்தில் நாகாலாந்தில் இருந்து 70 Km "அமைதியைப் பரப்புவதற்கான பேரணியை" தொடங்கியுள்ளார். இருப்பினும் அவர் கோஹிமா பகுதியில் NSCN-IM பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு ஹெப்ரானில் உள்ள தலைமையகத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் இவர் மீது "தேச விரோத செயலில்" ஈடுபட்டதாகக் கிளர்ச்சி குழுவால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவர் தற்போது நாகா கட்டுப்பாட்டில் உள்ளாரா அல்லது விடுவிக்கப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

நாகாலாந்தைச் சேர்ந்த நாகா-மாவோயிஸ்ட் கிளர்ச்சி குழு இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து தனியாக "நாகலிம்" உருவாக்கப் போர் நடத்தி வருகின்றது. நாகலிம் ஒரு தனி மாநிலமாக மாற்ற NSCN-IM யின் நீண்ட நாள் உள்ள கோரிக்கையாகும். இவர்களுடன் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2015 இல் NSCN-IM யில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இவர்களது கோரிக்கைகள் பல பேச்சுவார்த்தையின் போது தீர்க்கப்பட்டாலும், இவர்கள் தனியாகக் கோரும் கோடி மற்றும் தனி அரசியல் அமைப்பை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகின்றது. 

Similar News