அப்பாவி பழங்குடியினரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாக புகார் - சர்ச் கேட் சீல் வைக்கப்பட்டு 144 தடை உத்தரவு!
ஒரிசாவில் அப்பாவி பழங்குடியினரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாக புகார்கள் வந்ததை அடுத்து, பத்ரக் மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் 144 தடையை அமல்படுத்தியது. தேவாலயத்திற்கு அருகில் மூன்று பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதிக்கப்படுவதாக கூறியது.
இந்த தேவாலயம் ஒடிசாவின் பத்ரக் பிளாக்கின் கீழ் உள்ள கெல்டுவா கிராமத்தில் அமைந்துள்ளது. பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாற்றப்படுவதாக புகார்கள் வந்தன. சமூகங்களுக்கிடையில் சமாதானம் சீர்குலைந்துள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். மாவட்ட நிர்வாகம் கெல்டுவாவில் பிரிவு 144 ஐ அமல்படுத்தியுள்ளது, தேவாலயத்திற்கு அருகில் மூன்று நபர்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள், என்று பத்ரக் துணை ஆட்சியர் மனோஜ் பத்ரா கூறினார்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பூலாமணி முண்டா கூறுகையில், "நாங்கள் இங்கு பிரார்த்தனை செய்ய வந்தோம். நாங்கள் இங்கு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தவில்லை. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தவில்லை. இந்த தேவாலயத்தில் நாங்கள் அமைதியாக பிரார்த்தனை செய்தோம். நாங்கள் இயேசுவை நம்பி இயேசுவின் பாதையில் செல்கிறோம். இங்குள்ளவர்கள் ஏன் எங்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்றார்.