ஒடிசா பரபரப்பு - இந்து கோவில் சிலை இரண்டாக உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு!

ஒடிசா பரபரப்பு - இந்து கோவில் சிலை இரண்டாக உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு!

Update: 2021-01-06 09:37 GMT
சமீப காலமாக இந்தியாவில் குறிப்பாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் இந்து கோவில் சிலைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. தொடர்ச்சியாக அதுபோன்று மூன்று சம்பவங்கள்  நடந்து வந்த நிலையில் தற்போது மற்றொரு இந்து கோவிலின் இரண்டு சிலைகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது ஆந்திரப் பிரதேச எல்லையில் ஒடிசாவில் முனிகுடா பகுதியில் உள்ள சிவன் கோவிலில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. கோவில் பூசாரி காலையில் கோவிலை வந்த பார்த்த பொழுது சரஸ்வதி மற்றும் லட்சுமி சிலைகள் இரண்டு துண்டாக உடைந்திருப்பதை அவர் கண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக அவர் கோவில் நிர்வாகத்துக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.

மேலும் அந்த கோவிலில் உள்ள ஜெகன்னாத் கடவுளின் ஆபரணங்களும் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தைக் கோவில் நிர்வாகம் முனிகுடா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. உள்ளூர் வாசிகள் உட்படக் கோவில் நிர்வாகமும் குற்றவாளிகள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு பல இந்து சிலை மீதான தாக்குதல் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று சீதாராம் கோவிலில் உள்ள சீதா சிலை மீது தாக்குதல் நடைபெற்றது. ஜனவரி 1 இல் ராஜமுந்திரி மாவட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி சிலை இழிவுபடுத்தப்பட்டது. அதே போன்று கடந்த மாதம் 400 வருடம் பழமையான ராமர் சிலை தாக்கப்பட்டது.

Similar News