சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு.. நாளை முதல் தொடக்கம்.!

சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு.. நாளை முதல் தொடக்கம்.!

Update: 2020-12-02 08:46 GMT

கொரோனா தொற்று காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடும் நிபந்தனைகளை கேரள அரசு விதித்துள்ளது. சபரிமலையில் திங்கள் முதல் வெள்ளிவரை 2,000 பேருக்கும், சனி, ஞாயிறு நாட்களில் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்வதற்கு கேரள அரசு அனுமதியளித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலையில் இந்த வருடம் மண்டல பூஜை மகரவிளக்கு விழாவையொட்டி குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை ஆயிரம் பேரும் சனி, ஞாயிறு நாட்களில் 2 ஆயிரம் பேரும் மண்டல பூஜை மற்றும் மகர விழா நடைபெறும் அன்று 5 ஆயிரம் பேரும் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடர்ந்து கேரள அரசை வலியுறுத்தி வருகிறது. இதனையடுத்து சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதனை ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News