கடந்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பான இயற்கை விவசாயம் - வேற லெவலுக்கு உயர்ந்த வேலைவாய்ப்பு!
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில், 29.41 லட்சம் ஹெக்டேர், 38.19 லட்சம் ஹெக்டேர் மற்றும் 59.12 லட்சம் ஹெக்டேர் இயற்கை உரம் மற்றும் இடுபொருட்களைப் பயன்படுத்தி, இயற்கை விவசாயத்தின்கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
140 மில்லியன் ஹெக்டேர் பயிரிடப்படக் கூடிய நிலத்தில், இது 2.10 சதவீதம், 2.72 சதவீதம் மற்றும் 4.22 சதவீதம் ஆகும். ரசாயனக் கலப்படமற்ற இயற்கை உரங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.
பரம்ப்ரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் இயற்கை வேளாண்மை சங்கிலி மேம்பாடு ஆகிய திட்டங்கள் மூலம் அரசாங்கம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.
இதனையடுத்து உணவு பதப்படுத்துதல் என்பது நாட்டின் முக்கிய வேலைவாய்ப்பு மிகுந்த தொழில்களில் ஒன்றாகும். உணவு பதப்படுத்துதல் துறை உட்பட பதிவு செய்யப்பட்ட உற்பத்தித் துறைக்கான தரவு, தொழில்துறையின் வருடாந்திர ஆய்வு மூலம் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது.
2018-19ஆம் ஆண்டுக்கான தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, பதிவு செய்யப்பட்ட உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள மொத்த நபர்களில் உணவு பதப்படுத்துதல் துறை 11.22% பங்களித்துள்ளது. 2016-17-ல் 18.53 லட்சம் பேரும், 2017-18ல் 19.33 லட்சம் பேரும், 2018-19ல் 20.05 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
Input From: agriculturepost