நம் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் விளங்குகிறது - மத்திய அமைச்சர் பெருமிதம்!
நம்முடைய பாரம்பரிய மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் விளங்குவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்.
உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற வரும் காசி தமிழ் தங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் சிறப்புரையாற்றினார். குறிப்பாக அவர் கூறுகையில், நம்முடைய பாரம்பரிய மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளது என்று எடுத்துரைத்தார். தமிழகத்திற்கும் உத்தர பிரதேசத்திற்கும் இடையே நீண்ட கால பாரம்பரிய கலாச்சார தொடர்புகள் இருப்பதும் இந்த பிணைப்பை மீட்டெடுப்பு வலுப்படுத்த வகையில் காசி தமிழ் சங்க நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடக்கிறது.
வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைந்து வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரயில்களில் இருந்து காசி அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் வாரணாசி நகரில் நேற்று நடந்த காசி தமிழ் தங்கம் நிகழ்ச்சியில் சமூக மற்றும் தேசிய கட்டமைப்பின் கோவில்களின் பங்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஆதரவு முழுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக நம்முடைய கோவில்கள் விளங்குகிறது அதை நம் வாழ்வின் வழியாகும் என்றும் கூறினார்.
Input & Image courtesy: Dinamalar