எல்லையில் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் ராணுவம் - ராணுவ துணை தளபதி தகவல்.!

எல்லையில் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் ராணுவம் - ராணுவ துணை தளபதி தகவல்.!

Update: 2020-12-13 18:00 GMT
 எல்லையில் அப்பாவி பொதுமக்களை குறிவைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டில் போர்நிறுத்த மீறல்கள் அதிகரித்துள்ளதாக இந்திய இராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சதீந்தர் குமார் சைனி தெரிவித்தார்.

இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடிந்து வெளியேறும் வீரர்களிடையே உரையாற்றிய ஜெனரல் சதீந்தர் குமார் சைனி, "கடந்த ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளுடைய புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த ஆண்டு கட்டுப்பாட்டுக்கோடு முழுவதும் போர்நிறுத்த மீறல்கள் அதிகரித்துள்ளது தெரியவரும். மேலும், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தரப்பில் இருந்து பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன"  எனக் கூறினார்.

"இந்த செயல்கள் வெறுக்கத்தக்கவை. அப்பாவி பொதுமக்களிடையே உயிரிழப்புகள் நிகழ்ந்திருந்தாலும், நாங்கள் தகுந்த முறையில் பதிலடி கொடுத்து வருகிறோம். கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் அனைத்து அடாவடிகளையும் எதிர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்திய மற்றும் சீன தரப்பினரிடையே நடந்து வரும் உரையாடல்களில், சைனி, இந்தியத் தரப்பு இராஜதந்திர மற்றும் இராணுவ மட்டங்களில் சீன பிரதிநிதிகளுடன் தொடர்பில் அவர் தனது கருத்தை தெரிவித்தார். அகாடெமியில் நடந்த பாஸிங் அவுட் பரேட் பற்றி பேசிய சைனி, "கொரோனா தொற்றுநோயின் தடைகள் இருந்தபோதிலும் பாஸிங் அவுட் அணிவகுப்பு மற்றும் பிற நிகழ்வுகள் நடத்தப்படுவது மிகவும் திருப்தி அளிக்கிறது" என்று கூறினார். 

Similar News