இந்தியாவில் பிரச்சனைகளை கிளப்பும் பாகிஸ்தானின் சூழ்ச்சி... NIA அதிகாரிகள் கூறிய பகிர் தகவல்!
இந்தியாவில் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் முயற்சிக்கும் பாகிஸ்தான் சூழ்ச்சி.
நேற்று ஜம்மு -காஷ்மீர் பகுதியில் பூஞ்ச் மாவட்டத்தில் 100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பயங்கரவாதிகளின் ஊடுருவலின் போது நமது பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டது.போதைப் பொருள் மட்டுமல்லாமல் 10 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஏகே 47 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இது சம்பந்தமாக மூன்றுபேரை பிடித்து விசாரித்த போது இவர்கள் பாகிஸ்தானிமிருந்து இதை வாங்கி வந்துள்து தெரியவந்துள்ளது.
அதே போல இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு இலங்கை வழியாக 4 கோடி மதிப்புள்ள தங்ககட்டிகள் கடத்தி வரப்பட்ட போது மத்திய புலனாய்வு அதிகாரிகளின் சோதனையின் தொடர்ச்சியாக கடத்தல்காரர்கள் கடலில் தங்கத்தை வீசியுள்ளனர்.அதை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல சென்ற 26கிலோ தங்கம் கடலில் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த சிலநாட்களாக நேபாளம் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கள்ள நோட்டுகள் கோடிக்கணக்கில் புழக்கத்தில் விடப்படுகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் இது சம்பந்தமாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறாக நமது எதிரிநாடுகள் நமது பொருளாதாரத்தை சீர்குலைக்க உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த கள்ளநோட்டு, போதைப்பொருள், ஆயுதக்கடத்தல், தங்க கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதையெல்லாம் முறியடிக்க மத்திய அரசின் எல்லையோர பாதுகாப்பு படை கடலோர காவல்படை இன்னும் கவனமாக செயல்பட்டு அந்தந்த மாநில அரசுகளின் காவல்துறையோடு இணைந்து, அறிவுறுத்தல் வழங்கி உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று என்.ஐ.ஏ.அதிகாரிகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News