காஷ்மீரில் பதுங்கியுள்ள 38 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை!
காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த 38 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த 38 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் பதுங்கியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பற்றிய தகவலை உளவுத்துறையினர் சேகரித்து வருகின்றனர். அதன்படி காஷ்மீரில் சுமார் 38 பேர் ரகசியமாக பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி 27 பேர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்களும், 11 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த பயங்கரவாதிகள் அனைவரும் உள்ளூரை சேர்ந்த சிலர் உதவியுடன் பதுங்கியிருக்கின்றனர். மேலும், சில உள்ளூர் வாசிகளுக்கும் கையெறி குண்டு வீசுதல் மற்றும் குறி வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளையும் வழங்குகின்றனர். இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
Source, Image Courtesy: Dinamalar