பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்.. தொடர்ந்து எல்லை மீறுகிறதா...

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் வீசப்பட்ட போதை பொருட்கள்.

Update: 2023-04-18 02:17 GMT

சமீப காலங்களாக பாகிஸ்தானில் எல்லை மீறல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திய எல்லைகளில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் ட்ரோன் பயன்படுத்தி பல்வேறு அட்டகாச செயல்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் இருக்கிறது, இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் இரவில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.


அப்பொழுது அங்கும் இருக்கும் கிராமத்தின் பாகிஸ்தான் எல்லையை கடந்து இந்திய பகுதிக்குள் ட்ரோன் ஒன்று பறந்து வந்து சத்தம் கேட்டது. உடனே இந்திய பகுதிக்குள் பறந்து வந்த ட்ரோனை வீரர்கள் துப்பாக்கி கொண்டு வீழ்த்தினார்கள். குறிப்பாக இரண்டு நாட்கள் எல்லைகளுக்கு இடையில் போதைப் பொருட்கள் மற்றும் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்களும் பரிமாற்றம் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.


அதற்குள் அந்த ட்ரோன் இருளில் மறைந்து விட்டது. பின்னர் அந்த பகுதியை வீரர்கள் சோதனை செய்தார்கள் அப்போது அங்கு மூன்று கிலோ எடை கொண்ட போதைப் பொருள் இருந்தது. சர்வதேச அளவில் எல்லை தாண்டி இப்படி இரவில் அதிகமாக நடக்கிறதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை பாதுகாப்பு படையினர் யார் இங்கே விட்டு சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். இந்த ஒரு சம்பவம் காரணமாக பஞ்சாப் எல்லை பகுதிகளில் சற்று பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News