ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் நாடாளுமன்றம்!

ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் நாடாளுமன்றம்!

Update: 2021-01-29 09:53 GMT

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு, மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

இந்த உரையில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம், தடுப்பூசிகளை உருவாக்குவதில் இந்தியா சாதனை படைத்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் உள்ளிட்டவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 -22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை பட்ஜெட் தாக்கல், புதிய முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது கடந்த காலங்களில் பட்ஜெட் தாக்கலின்போது அனைத்து எம்.பி.க்களுக்கும் காகித வடிவில் அடங்கிய புத்தகம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த முறை இணையத்தில் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து எம்.பி.க்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
 

Similar News