பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மக்களின் வளர்ச்சிக்கான விவாதங்களாக இருக்க வேண்டும்.. சபாநாயகர் ஓம் பிர்லா.!
பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மக்களின் வளர்ச்சிக்கான விவாதங்களாக இருக்க வேண்டும்.. சபாநாயகர் ஓம் பிர்லா.!
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 2 நாள் அரசு முறை பயணமாக மேகாலயா சென்றுள்ளார். அந்த மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டமபை கட்டிடத்தை ஆய்வு செய்தார். இன்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்குபெறுகிறார்.
இந்நிலையில், மேகாலாய மாநில சட்டசபையில் சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் சாசன நிறுவனங்களும் அவற்றின் அரசியல் சாசன வரைமுறைக்கு உட்பட்டு இணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் வலிமை பெறும்.
மேலும் அவர் பேசும்போது, பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் விவாதங்கள் நடைபெறுகிறது. அப்பபோது தேவையில்லாதவை பேசப்படுவதை தவிர்க்க வேண்டும். மக்களின் வளர்ச்சி பணிகள் குறித்து மட்டும்தான் விவாதங்கள் இருக்க வேண்டும். தற்போதையை கொரோனா சூழலுக்கு மத்தியிலும் கடந்த நவம்பரில் சட்டசபை கூட்டத்தை நடத்தியதற்காக மேகாலயா மாநில எம்.பி.க்களுக்கு சபாநயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்தார்.