குட்டி நாய்களை குறிவைக்கும் 'பார்வோ' வைரஸ்.. எச்சரிக்கும் கால்நடை மருத்துவர்கள்.!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஏராளமானோர்கள் தங்களின் உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர்.

Update: 2021-07-22 10:27 GMT

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஏராளமானோர்கள் தங்களின் உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் நமது செல்லப்பிராணிகளா நாய்களுக்கும் தாக்கும் புது வகையான வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு பார்வோ என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்த வைரஸ் நாய்களிடையே மிகவும் வேகமாக பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையான வைரஸ்கள் இந்திய நாய்களிடையே அதிகமாக காணப்படுவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இது போன்ற வைரஸ்கள் ஒரு வயதுக்கும் கீழ் உள்ள பப்பி நாய்குட்டிகளை தாக்குவதாக தெரியவந்துள்ளது. குட்டிகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும். இதனால் பார்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 3 முதல் 4 நாட்களுக்குள் இறக்க நேரிடும். இதனை சரிசெய்வதற்கு உடனடியாக கால்நடை மருத்துவர்களை அணுகினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News