விவசாயிகளை வெளியேற்ற மனு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

விவசாயிகளை வெளியேற்ற மனு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

Update: 2020-12-16 07:10 GMT

டெல்லியை ஒட்டியுள்ள பகுதிகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த ரிஷப் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் அதிக அளவில் கூட்டத்தை கூட்டுவது சட்ட விரோதம். இதனால் கொரோனா தொற்று மீண்டும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும் விவசாயிகள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணத்தினால் மருத்துவ சேவைக்காக வருபவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாக உள்ளது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இது போன்று, வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவரும், வக்கீல் ரீபக் கன்சலும் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.
 

Similar News