மிஷன் 2047: இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க நடக்கும் பகீர் திட்டம் - நாச வேலையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா!
பாட்னா போலீஸ் ஏடிஎஸ் மற்றும் என்ஐஏ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஜூலை 14 அன்று தீவிரவாதக் குழுவான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பயிற்சி முகாம் முறியடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைகள் நடந்த போது இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான 'மிஷன் 2047' பற்றிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் இளைஞர்களுக்கு ஜிகாத் குறித்து பயிற்சி அளித்து, 2047க்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சி நடப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இதில் 26 பேர் மீது இரண்டு தனித்தனி எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது. அவர்களில் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முகமது ஜலாலுதீன் என்பவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். அவர் இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்ததாகக் கூறப்படுகிறது.
2013 இல் பாட்னாவின் காந்தி மைதானத்தில் அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஹன்கார் பேரணியின் போது தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது.
பீகார் ஏ.டி.எஸ்., என்.ஐ.ஏ மற்றும் பாட்னா காவல்துறையின் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
Input From: Hindupost