மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்!! பிரதமர் மோடி உறுதி!!
மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹால்டியா, அசன்சோல், சியுரி ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று பேசிய அவர், மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இளைஞர்களின் கனவுகளை சிதைத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகவும், அரசு பணிக்கு ஆட்சியாளர்கள் லஞ்சம் பெறுவதாகவும் கூறினார். பாஜக ஆட்சி அமைக்கும்போது அரசு பணிக்கான தேர்வு வெளிப்படையாக நடைபெறும் என்றும், லஞ்சம், கமிஷன் இன்றி தகுதியின் அடிப்படையில் இளைஞர்களுக்கு அரசு பணி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஊழல், குற்றங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊடுருவல் முழுமையாக தடுக்கப்படும் என்றும் கூறினார். தகுதியுள்ள அகதிகளுக்கு மட்டும் சட்ட பாதுகாப்பு வழங்கப்படும். எனவும், திரிணமூல் காங்கிரஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பிரதமர் கூறினார்.