அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்!! பிரதமர் மோடி பேச்சு!!

Update: 2026-04-07 03:09 GMT

பிரதமர் நரேந்திர மோடி அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, வளர்ச்சியை முன்னெடுப்பதில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவதில்லை.

ஊழலில் ஈடுபடுவதற்கு ஏற்ப குறுகிய கால பணிகளை மட்டுமே அக்கட்சி மேற்கொள்கிறது. ஆனால், நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் கட்சி பாஜக என கூறினார்.


கடந்த 10 ஆண்டுகள் அசாமை பல்வேறு சிரமங்களில் இருந்தும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தும் மீட்டெடுப்பதிற்கான ஆண்டுகளாக இருந்தன. இனி நாம் அசாமின் அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என பிரதமர் கூறினார்.


அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News