3ம் கட்ட தடுப்பூசி.. 50 வயதுடையவர்களுக்கு முன்னுரிமை.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.!

3ம் கட்ட தடுப்பூசி.. 50 வயதுடையவர்களுக்கு முன்னுரிமை.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.!

Update: 2021-02-06 09:20 GMT

பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, கொரோனா தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது. இவற்றுக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கடந்த மாதம் ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கியது. முதன் முதலாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 50 லட்சம் பேருக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3வது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது. இதில் 50 வயதை கடந்தவர்கள் மற்றும் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த பிரிவில் மட்டும் 27 கோடி பேர் உள்ளனர்.

இந்த பணி தொடங்கும் தேதியை சரியாக சொல்ல முடியாது. மார்ச் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பணிகள் தொடங்கும். தடுப்பூசி பணிக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்றார்.

Similar News