போதைப்பொருள் பயன்பாட்டிற்கு முடிவுகட்டும் மோடி அரசு... இளம் தலைமுறைக்கு கூறும் அறிவுரை!
சமூகத்தில் போதைப் பொருள்களின் தீங்கிற்கு முடிவுகட்டும் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
போதைப்பொருள் பழக்கத்தின் காரணமாக இன்று இளம் தலைமுறை நிறைய பெயர் தவறான பாதைகளுக்கு செல்ல ஒரு ஆயுதமாக இருக்கிறது. போதைப்பொருள் அவர்களை அடிமையாக வைத்துக் கொண்டு பல தவறான செயல்களை செய்வதற்கு தூண்டுகிறது. குறிப்பாக போதைப்பொருள் பழக்கம் காரணமாக தங்கள் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாமல் அவர்கள் பேராசையில் பல்வேறு விஷயங்களை செய்கிறார்கள். இது சமுதாயத்திற்கு மற்றும் அவர்களுடைய நலனுக்கும் தீங்கான செயல்களாகவே முடிந்து வருகிறது.
இவற்றை கருத்தில் கொண்டு போதை பொருள் சப்ளை செய்யும் நபர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஒரு செயலில் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. போதை பொருளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. சமுதாயத்தில் போதைப்பொருள் ஊடுருவுகளை தடுப்பதன் மூலமாக இவற்றை முற்றிலும் தடுக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு அவற்றிற்கான முயற்சிகளில் களம் இறங்கி இருக்கிறது.
சமூகத்தில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீங்கிற்கு முடிவுகட்டும் முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். முன்முயற்சியாகும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது, “சமூகத்தில் போதைப் பொருட்களால் ஏற்படும் முடிவுகட்டுவதில் ஒருங்கிணைப்பையும் செயலூக்கத்தையும் கொண்டுவந்திருப்பது நல்ல முன்முயற்சியாகும்.”
Input & Image courtesy: News