மத்தியப் பிரதேசத்தின் ரேவா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து: ஏன் தெரியுமா?

விமான நிலைய வசதியைப் பெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-17 03:27 GMT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் எப்பொழுதும் மக்கள் நலனை விரும்பும் அரசாங்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பிறகு பசுமை விமான நிலையங்களின் எண்ணிக்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த அளவில் விட கடந்த எட்டு வருடங்களில் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது.குறிப்பாக எட்டு வருடங்களில் மட்டும் சுமார் 11-க்கும் மேற்பட்ட பசுமை விமான நிலையங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு 9 விமான நிலையங்கள் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


எந்த அளவிற்கு ஒரு நாட்டின் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு இருக்கிறதோ? அது அந்நாட்டின் வளர்ச்சியை பிரதி பலிக்கும். அந்த வகையில் மத்திய அரசாங்கம் விமான நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி முக்கிய திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி இவற்றை அதிகரிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் முதல்முறையாக தற்பொழுது விமான நிலையம் அமைக்கப்பட்ட இருப்பது அங்கு இருக்கும் உள்ளூர் மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


விமான நிலைய வசதியைப் பெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்ட மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் ரேவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை எளிதாகும் என்று மோடி கூறியுள்ளார். ரேவா நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா வெளியிட்ட ட்விட்டர் செய்தியை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் இருக்கும் ரேவா மாவட்ட மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகள் என பதிவு செய்து இருந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News