செவித்திறன் இல்லாத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை: பிரதமர் பாராட்டு!
5 வயது வரையிலான குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாட்டுக்கான உள்வைப்புக் கருவி பொருத்தும் திட்டத்திற்கு பிரதமர் பாராட்டு.
குறிப்பாக குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் இளம் வயதிலேயே காது கேட்காமல் போன்று குறைபாடு உள்ள குழந்தைகள் பல்வேறு துன்பங்களை பெற்று வருகிறார்கள். மற்ற குழந்தைகளைப் போல இல்லாமல் அவர்கள் தனியாக ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை மற்றும் சரியான நேரத்தில் கிடைப்பதன் மூலமாக அவர்கள் சிறந்த பலனை பெற முடியும். அந்த வகையில் தற்பொழுது 5 வயது உட்பட்ட செவித்திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கும் திட்டம் நடைபெற்றது.
நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த ஒரு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து, செவித்திறன் குறைபாட்டுக்கான உள்வைப்புக் கருவி பொருத்தும் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பலன்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் செலவாகும்.
இது தொடர்பாக மத்திய மின்சாரம் மற்றும் கனரகத் தொழில்துறை இணை அமைச்சர் கிருஷண் பால் குர்ஜார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியிருந்தார், மிக நல்லத் தகவல். குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். இலவசமாக குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசாங்கம் முன் வந்து இருப்பதை அவர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News