பிர்சா முண்டா நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனால் தலைநகர் ராஷ்சியில் பிர்சா முண்டாவின் நினைவு அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு அருங்காட்சியத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர் அவர் உரையாற்றிய பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15ம் தேதி ஜன்ஜாதிய கவுரவ் தினமாக கொண்டாடப்படுகிறது.
மேலும், பழங்குடி சகோதர, சகோதரிகள் மற்றும் குழந்தைகளுடன் என்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்திருக்கிறேன். அவர்களின் இன்ப துன்பங்களுக்கும், அன்றாட வாழ்க்கைக்கும், தேவைகளுக்கும் நான் சாட்சியாக உள்ளேன். எனவே இன்றைய நாள் எனக்கு உணர்வுப்பூர்வமான நாளாக உள்ளது என்றார். இந்த விழாவில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Source, Image Courtesy: Maalaimalar