ஒரு வங்கி சேவையை கூட ஒழுங்காக நிர்வகிக்காத காங்கிரஸ் அரசு - 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த கூத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர்!
PM launches two innovative customer centric initiatives of RBI
வங்கித்துறையை வலுப்படுத்த, கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதையும், இதன் விளைவாக, இந்த வங்கிகளின் நிர்வாகம் மேம்பட்டிருப்பதுடன், முதலீட்டாளர்களிடையே இவற்றின் மீதான நம்பிக்கையும் வலுவடைந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த சில ஆண்டுகளில் நிதி சார்ந்த உள்ளடக்கிய சேவைகள் முதல், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு வரை நாட்டின் வங்கித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
6-7 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிச் சேவை, ஓய்வூதியம், காப்பீடு போன்றவை, இந்தியாவில் தனித்தன்மையுள்ள மன்றம் போன்று இருந்ததாகப் பிரதமர் கூறினார். இந்த சேவைகளை நாட்டில் உள்ள சாமான்ய மக்கள், ஏழைக்குடும்பங்கள், விவசாயிகள், சிறுவணிகர்கள்- வியாபாரிகள், பெண்கள், தலித்துகள் - ஒடுக்கப்பட்ட– பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளிட்டோர் எளிதில் அணுக முடியாததாக இருந்தது.
இந்தச் சேவைகளை மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தவர்கள் ஒருபோதும் அதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, மாற்றத்தை ஏற்படுத்தாதற்கு பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறிவந்தனர். வங்கிக் கிளை இல்லை, பணியாளர்கள் இல்லை, இணையதள வசதி இல்லை, விழிப்புணர்வு இல்லை, எந்த சிந்தனையும் இல்லை என்ற வாதங்களை எடுத்துரைத்தனர்.
யுபிஐ சேவை, இந்தியாவைக் குறுகிய காலத்தில் உலகின் முன்னணி டிஜிட்டல் பணபரிவர்த்தனை நாடாக மாற்றியதாகப் பிரதமர் தெரிவித்தார். 7 ஆண்டுகளில், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா 19 மடங்கு முன்னேறியுள்ளது. தற்போது நமது வங்கி முறை 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் 12 மாதங்களிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் செயல்பாட்டில் இருப்பதைத் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.