கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்திக் கொண்ட பிரதமர் மோடி.!

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்காக, தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2021-04-08 03:05 GMT

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடந்த மாதம் முதல் செலுத்தப்பட்டது. அப்போது பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்.

அப்போது அவர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவெக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு சில வாரங்களுக்கு பின்னர் 2வது டோஸ் எடுத்து கொள்ள வேண்டும்.


 



அதன்படி, பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் இன்று செலுத்தி கொண்டார். கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்காக, தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

புதுச்சேரியை சேர்ந்த பி.நிவேதா மற்றும் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகிய இரு செவிலியர்கள் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தினர்.

Similar News