பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்.. கேந்திர வித்தியாலயா பள்ளியில் இலவச கல்வி.. பிரதமர் மோடி அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் தொற்றின் கோர பசிக்கு பெற்றோரை இழந்த ஏராளமான குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக இருக்கிறது.

Update: 2021-05-29 13:46 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் கோர பசிக்கு பெற்றோரை இழந்த ஏராளமான குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக இருக்கிறது.


 



இந்நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கருதி மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயதை அடைந்த பின்னர் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.




 


தனியார் பள்ளியில் படித்து வந்தால் அவர்களுக்கு பி.எம். கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும், புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News