சரயு நதிக்கரையில் வரலாற்றை எழுதிய மோடி

அயோத்தியில் சரயு நதிக்கரையில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றி வழிபாடு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-25 02:31 GMT

தீபாவளி பண்டிகையை அன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி விழாக்கோலம் பூண்டது. சரயு நதிக்கரையில் 18 இலட்சம் தீபங்கள் ஏற்றி நடந்த ஆராதனை நிகழ்ச்சியில் பிரதமரின் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்து வழிபாட்டை நடத்தினார். அயோத்தியில் நகர் முழுவதும் சரயு நதி கரையில் மக்கள் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றினார்கள். சுமார் 18 லட்சம் தீபங்கள் எற்றப்பட்டது. இந்த தீப ஒளியின் பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்றார்.


இதற்காக மாலையில் அயோத்தி சென்ற அவர் இந்த பிரம்மாண்டமான தீப உற்சவத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் நதி கரையில் நடந்த ஆராதனை வழிபாட்டில் பங்கேற்றார். தீப உற்சவர் நிகழ்ச்சியை ஒட்டி அங்கு இராமாயணம் தொடர்பான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. மேலும் அலங்கார ஊர்திகள், அனிமேஷன் ஊர்திகள், 3d ஹலோ கிராம் நிகழ்ச்சிகள் வான வேடிக்கைகள் நடந்தன.


இவற்றை பிரதமர் மோடி மற்றும் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்தனார் உள்ளிட்ட தலைவர்கள் கண்டு மகிழ்ந்தனர். மேலும் நாம் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த லட்சுக்கணக்கான மக்களும் இதில்கலந்து கொண்டனர். முன்னதாக ராமஜென்ம பூமிக்கு சென்று பிரதமர் மோடி அங்கு ராமபிரானை தரிசனம் செய்தார். அத்துடன் ஆர்த்தி வழிபாட்டிலும் பங்கேற்றார். தொடர்ந்து அங்கு நடந்து வரும் ராமர் கோயிலின் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். அவருக்கு கோவில் பணிகளின் நிலவரம் குறித்த அதிகாரிகள் விளக்கி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News