பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தொடங்கப்பட்ட 48 ஆயிரம் நிறுவனங்கள்!
பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை சுமார் 48 ஆயிரம் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது.
PMEGP என்ற திட்டத்தின் கீழ் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக ஒரு நாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது இந்த பயிலரங்கை துணை தலைமை செயல் அதிகாரி ராஜன் பாபு தொடங்கி வைத்த பேசினார். மேலும் அவர் குறிப்பிடுகையில் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை 48 ஆயிரம் நிறுவனங்கள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில் இந்த ஒரு திட்டம் செயல்படுத்த வருவதாகவும் மேலும் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட வங்கிகள் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2008 முதல் 2022 மார்ச் வரை இந்தத் திட்டத்தின் கீழ் 7.82 லட்சம் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மட்டும் 48 ஆயிரம் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 51 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடப்பு நிதியாண்டில் 1.5 லட்சம் நிறுவனங்கள் துவங்கப் பட்டுள்ளதாகவும், இதன் வாயிலாக 300 கோடி லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு 2800 நிறுவனங்கள் துவங்கவும் சுமார் 170 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கவும் இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்க செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் கடும் விண்ணப்பங்களை நிராகரிப்பதை குறைக்க வேண்டும். ஆண்டுக்கு சுமார் 5,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டால் அதில் 20 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. நீலகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பின்னடைவில் உள்ளது. எனவே இவற்றில் அதிக கவனம் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படும் உள்ளது.
Input & Image courtesy: Dinamalar News