பொருளாதாரத்தில் பின்தங்கிய 3024 பேருக்கு வீடுகள்: வழங்கிய பிரதமர் மோடி!

பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த 3024 நபருக்கு வீடுகளை வழங்கிய பிரதமர் மோடி.

Update: 2022-11-03 12:29 GMT

டெல்லியில் குடிசைகள் மறுவாழ்வு திட்டத்தின் ஒரு பகுதியாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு வீடுகள் வழங்க ஏற்கனவே அரசு நிதி உதவி அளித்து இருந்தது. இந்த மாதிரி நலிவடைந்த பிரிவினருக்கு சுமார் 3024 புதிய வீடுகள் தற்போது கட்டித் தரப்பட்டு இருக்கிறது. அந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. பயனாளர்கள் பலருக்கும் பிரதமர் மோடி புதிய வீட்டிற்க்கான சாவிகளை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் துணைநிலை கவர்னர் மற்றும் மத்திய வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி ஹர்திக் சிங் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதை ஒட்டி பிரதமர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்த அறிவிக்கின்படி, இந்த வீடுகள் குடிசை வாசிகளுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு உணர்வை அழிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


டெல்லியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும் இந்த வீடுகள் மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்கள் தங்களுக்கான ஒரு சொந்த வீட்டை பெரும் முயற்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு பங்கை முன் வைத்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சமுதாயத்தில் தற்போது பின் தங்கிய மக்களுக்கு சேர வேண்டிய சலுகைகளை மத்திய அரசாங்கம் செய்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். டெல்லியில் உள்ள பல்வேறு குடும்பங்களுக்கு குறிப்பாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நாள். மேலும் அவர்களின் வாழ்வின் ஒரு தொடக்க நாளாக இது அமையும் என்றும் பிரதமர் மோடி அவர்கள் கூறினார்.

Input & Image courtesy:News 18

Tags:    

Similar News