இந்தியாவில் பின்தங்கியுள்ள 142 மாவட்டங்களை முன்னுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள சில ஆட்சியர்கள், நிதியமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு மாவட்ட அளவிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் அதனை விரைந்து செயல்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு மக்கள் தங்களுடைய லட்சியங்களுக்காக இரவு, பகலாக உழைத்து வருகின்றனர். இதனால் அவர்களின் லட்சியங்களை ஓரளவுக்கு நிறைவேற்றி வருகின்றனர். நாட்டின் பட்ஜெட் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற வகையில் திட்டங்களும் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
Prime Minister Narendra Modi interacting with DMs of various districts via video conferencing pic.twitter.com/ARcc3B8PqC
— ANI (@ANI) January 22, 2022
மேலும், நாடு சுதந்திரம் 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் சில மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது. நாட்டுடைய முன்னேற்றத்திற்கான தடைகளை வளர்ச்சியின் எடுத்துக்காட்டாக உள்ள மாவட்டங்கள் நீக்கி வருகிறது. அதே சமயம் வேகமாக முன்னேறிய மாவட்டங்கள் தற்போது எடுத்துக்காட்டாக இருக்கிறது. மாவட்ட வளர்ச்சியில் ஆட்சியர்களின் பங்கு அதிகம்.
குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் ஜன்தன் கணக்குகள் 45 மடங்கு உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி கழிப்பழை, மின்சார வசதி என்று பெருகி கொண்டே சென்றுள்ளது. வளர்ந்த மாவட்டங்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு வளர்ச்சியில் பின்தங்கிய ஆட்சியர்கள் அதனை நோக்கி பயணம் இருக்க வேண்டும். மக்களின் குறைகளை அறிந்து கொண்டு அவர்களிடம் ஆட்சியர்கள் அவர்களுக்கு நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Source: Puthiyathalaimurai
Image Courtesy:ANI