சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் ஏன் தெரியுமா?
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் பிரதமர் மோடி அவர்களின் அதிரடி அறிவிப்பு.
பிரதமர் மோடி மாதத்தோடு கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். நேற்று இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவில் வருகின்ற 28ஆம் தேதி முக்கியமான நாள், அன்றைய தினம் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாள் அவரது பிறந்தநாளுக்கு முன்பு ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளுக்கு முன்பு ஒரு முக்கிய முடிவு என்னவென்றால், பஞ்சாப் மாநில சண்டிகரில் உள்ள விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும்.
நம்பீரியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இதனால் 130 கோடி இந்தியர்களுக்கும் பெருமைப்படுகிறார்கள். அந்த சிறுத்தைகளை எப்பொழுது பார்க்கலாம் என்று ஆர்வமாக கேட்கிறார்கள். அவற்றை பராமரிக்கும் அவை சூழலுக்கு தகுந்த மாறி தங்களை எப்படி மாற்றிக் கொள்கின்றன? என்பதை பார்க்கவும் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அடிப்படையில் சிறுத்தைகளின் பொதுமக்கள் எப்பொழுது பார்க்கலாம் என்று முடிவு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். அந்த சிறுத்தைகளுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பது குறித்து பொதுமக்கள் இடையே போட்டி நடத்தப்பட முடிவு செய்துள்ளோம்.
மைகவ் வலைதளத்தில் இந்த போட்டி நடத்தப்படும். பாரம்பரிய பெயர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். மேலும் பெங்களூரில் யூத் பார் பரிவர்த்தன் என்று குழு இயங்குகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக இக்குழு தூய்மை பணியிடம் இதர சமுதாய பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அவர்களின் குறிக்கோள் "புகார்கள் சொல்வதை நிறுத்துங்கள்: செயல்பாட்டை தொடங்குவதில் ஆகும்" பெங்களூருவில் இதுவரை 370-க்கும் மேற்பட்ட இடங்களில் இக்குழு தூய்மைப்படுத்தி உள்ளது பாராட்டுத்தக்கது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Hindu News