பருவ நிலைக்கு உகந்த மிஷன் லைஃப் திட்டம் - உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்த பிரதமர் மோடி
பருவ நிலைக்கு உகந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் துவங்குகிறார் என்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குஜராத்தில் ஐ.நா பொது செயலாளர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பருவநிலை மாற்றம் பாதிப்புகளிலிருந்து பூமி காப்பாற்றுவதற்கான திட்டத்தை இது உருவாக்கும் என்றும் அவர் முன் வைத்தார். ஆண்டனியோ மூன்று நாள் பயணமாக இந்திய வந்தடைந்தார். இந்நிலையில் நேற்று அவர் குஜராத் மாநிலம் கேசவடியா சென்றார். அப்பொழுது அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இருவரும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள். பின்னர் மிஷன் லைஃப் என்று புதிய திட்டத்தை இருவரும் கூட்டாக தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் அடையாளச் சின்னமாக முழக்கம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்கள். இடத்தில் பருவநிலை மாற்றங்களின் பாதிப்புகளில் இருந்து பூமியை காக்க பூமியை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள உலகளாவிய செயல் திட்டமாகும்.
இந்த செயல் திட்டத்தில் பருவ நிலைக்கு உகந்த விதத்தில் வாழ்க்கை முறையில் செயல்பட வேண்டிய மாற்றங்களை பட்டியலிட்டு உள்ளன. தனி நபர்கள் தங்களுடைய அன்றாட வாழ் வாழ்க்கையில் சூழ்நிலைக்கு உகந்த முறையில் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள், தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள், அரசாங்கம் கடைபிடிக்க வேண்டிய கொள்கை ஆகியவை இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இது மக்களுக்கு ஆதரவான கிரகம் என்ற கருத்தை வலுப்படுத்த உதவும். மக்களின் கூட்டு அணுகுமுறை காரணமாக இதன் வெற்றி அமையும் என்று கூறியிருந்தார்.
Input & Image courtesy: News