இந்தியாவிற்கே திருவண்ணாமலை, வேலூர் சகோதரிகள் முன்னுதாரணமாக உள்ளனர்! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு!

திருவண்ணாமலையில் ஓடும் நாகநதி வறண்டு போனபோது, வேலூர், திருவண்ணாமலை மக்கள் ஒன்று சேர்ந்து மீட்ட மக்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

Update: 2021-09-26 09:08 GMT

திருவண்ணாமலையில் ஓடும் நாகநதி வறண்டு போனபோது, வேலூர், திருவண்ணாமலை மக்கள் ஒன்று சேர்ந்து மீட்ட மக்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இன்று 81வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றியதாவது: பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிகவும் கொண்டாட வேண்டிய தினம் உலக நிதி தினம் ஆகும். உலக நதிகள் தினத்தை கொண்டாடுவதால் செப்டம்பர் மாதம் முக்கியமான மாதமாக அமைந்துள்ளது. நமக்கு தண்ணீர் வழங்கி வரும் நதிகளுக்கு நாம் அளிக்க வேண்டிய பங்களிப்பு பற்றி நினைவு கூற வேண்டிய நாள். வருடத்திற்கு ஒரு முறை நதி பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வருடத்திற்கு ஒருமுறையாவது நதிகள் திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும். தனக்கு கிடைத்துள்ள பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகையினை தூய்மை கங்கை இயக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நாட்டிற்கு நதிநீர் மிகவும் முக்கியம். அதனை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. நதிகளை தூய்மையாக வைத்து கொள்வது நமது கடமை ஆகும். நதிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.


நாட்டில் குஜராத், ராஜஸ்தானில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூட்டு முயற்சி மூலமாக நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். கங்கையை போற்றும் திட்டம் வெற்றிகரமான திட்டமாக உள்ளது. நதியினை மக்கள் புண்ணியஸ்தலமாக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நாகநதி இருக்கிறது. ஒரு சமயத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்ட இந்த நதி சில வருடங்களில் முன் வறண்டது. ஆனால் வேலூர், திருவண்ணாமலை பெண்கள் குழுவினர் ஒன்றாக சேர்ந்து தடுப்பணைகள் அமைத்தல் மற்றும் நிலத்தடி நீர் சேகரித்தல் என்று முயற்சியை மேற்கொண்டனர்.

இதன் பலனாக இன்று அந்த நதி உயிர் பெற்றுள்ளது மட்டுமின்றி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இது மிகப்பெரிய பெருமை அளிப்பதாக உள்ளது. தமிழக சகோதரிகளை போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்கும் முயற்சிகளை பலரும் முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source: Dinamalar

Image Courtesy:Deccan Republic.Com


Tags:    

Similar News