தேர்வில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல்.!

தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 14 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இன்று இரவு 7 மணிக்கு நடக்கும்.

Update: 2021-04-07 04:22 GMT

தேர்வுகளில் பங்கேற்க உள்ள மாணவர்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக பிரதமர் மோடி இன்று கலந்துரையாடி ஆலோசனை வழங்க உள்ளார். 'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்னை அல்ல' என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.




 


இந்நிலையில், நடப்பு ஆண்டின் மாணவர்களுடனான கலந்துரையாடல் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக இன்று (ஏப்ரல் 7ம் தேதி) நடைபெறுகிறது.

தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 14 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இன்று இரவு 7 மணிக்கு நடக்கும்.


 



இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டு ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 'உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். 'வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் மாணவர்கள் தேர்வுகளை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News