விளக்கு ஏற்றுவது, கை தட்டியது எதற்கு? எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பெருந்தொற்றின்போது கை தட்டுவது, விளக்கு ஏற்றுவது உள்ளிட்டவைகள் மருத்துவத்துறையை உற்சாகப்படுத்தவே என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 100 கோடிக்கும் அதிகமான நிலையில் செலுத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உறையாற்றினார்.

Update: 2021-10-22 05:57 GMT

அவர் தனது உறையில் கூறியதாவது: இந்தியாவில் தற்போது 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்திருக்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை புகழ்ந்து வருகிறது. இந்த சாதனைக்கு அனைத்து குடிமக்களே காரணம் என்றார். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா எனும் பெருந்துயத்தை சந்தித்த நாம் எவ்வித துயரத்தையும் சந்திக்கும் வலிமை பெற்றுள்ளோம். நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நமது குடிமக்களை காப்பாற்றியுள்ளது. இனி வரும் காலங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும், விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்பியது எப்படி பயனளிக்கும் என்ற கேள்வி எழுந்தது. அந்த முயற்சிகள் அனைத்தும் மருத்துவத்துறைக்கு உற்சாகத்தை அளித்தது. தற்போது 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம். கொரோனா பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் இந்த சாதனை பதில் அளிக்கும் என்றார். பிரதமர் மோடி குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்தது. தற்போது இந்த சாதனை எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சம்மட்டி அடியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy:NavBharat Times

Tags:    

Similar News