G20 மாநாட்டின் லோகோ வெளியீடு: இந்தியா பெருமை கொள்ள வேண்டிய தருணம்!
ஜி-20 மாநாட்டில் இந்திய தலைமை வகிப்பது அனைத்து மக்களும் பெருமிதம் கொள்ள வேண்டிய தருணம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சி.
ஜி-20 என்னும் அமைப்பின மாநாட்டிற்கு வருகின்ற டிசம்பர் மாதத்தில் இந்தியா தலைமை வகிக்க இருக்கிறது. ஜி2 என்னும் அமைப்பு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா இந்தோனேஷியா என ஆகிய மொத்த 19 நாடுகள் 6 யூனியனில் இடம் பெற்றுள்ளன.
இந்த அமைப்பின் நாடுகள் மொத்தமாக உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85% சதவீத பங்கு வகிக்கிறது. உலக வர்த்தகத்தில் 75% பங்களிப்பை கொண்டு இருக்கிறது. இந்த அமைப்புக்கு அடுத்த மாதம் 1ம் தேதி இந்தியா தலைமை ஏற்க இருக்கிறது. இந்தோனேசியாவிடமிருந்து இந்த தலைமை பொறுப்பை இந்தியாவிற்கு வருகிறது. இதை அடுத்து காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு G20 அமைப்பின் சின்னம் மற்றும் கருப்பொருளை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
நமது நாடு சுதந்திரத்தின் 75 வது ஆண்டு கொண்டாடுகிற தருணத்தில் அமைப்பிற்கு தலைமை ஏற்பது பெருமைக்குரியது. இது நமக்கு மிகவும் பெரிய வாய்ப்பு ஆகும் சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவை முன்னோக்கி அழைத்து செல்வதில் அவர்களுக்கு உரித்தான விகத்தில் எல்லா அரசுகளும் மக்களும் பங்களிப்பு செய்துள்ளார்கள். ஜனநாயகம் ஒரு கலாச்சாரமாக மாறுகிற பொழுதுகள் மோதல் நோக்கத்தொகை முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியும் என்று உலகிற்கு இந்தியா எடுத்துக்காட்டு இருக்கிறது. முன்னேற்றமும் சுற்றுச்சூழலும் ஒன்று இணைந்து வெற்றி நடை போட முடியும். G 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவது நாட்டின் அனைத்து மக்களும் பெருமிதம் அளிப்பதாகும். இது அனைத்து இந்தியர்களுக்கும் மாபெரும் பெருமையை கொண்டு வரும் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று அதனுடைய கருப்பொருளை வெளியிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
Input & Image courtesy: Hindu News