எல்லோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.. பிரதமர் மோடி.!

கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் இரண்டு தடுப்பு மருத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-03-01 09:14 GMT

கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் இரண்டு தடுப்பு மருத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் முதற் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதுவரை 1.50 கோடி பேர் வரைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


 



இதனிடையே 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

அதன்படி இன்று நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று டெல்லியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவருக்கு கோவெக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


 



இதனையடுத்து பிரதமர் மோடி கூறியதாவது: நமது விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் விரைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக குறிப்பிட்ட சக்தியை உருவாக்கி உள்ளனர். எனவே தகுதியுடைய அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News