11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து எனது சாதனையை நானே முறியடுத்துள்ளேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2022-01-12 13:05 GMT

இந்தியாவில், உத்தரபிரதேச மாநிலத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் திறந்து சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிககளை திறந்து எனது சாதனையை நானே முறியடித்துள்ளேன் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழில் தன்னுடைய உரையை தொடங்கினார். மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014ம் ஆண்டில் 317 மருத்துவக்கல்லூரிகள் இருந்தது. இதன் பின்னர் சில ஆண்டுகளிலேயே 597 ஆக மருத்துவக்கல்லூரிகள் உயர்ந்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது மருத்துவக்கல்லூரிகள் குறைவு, தற்போதைய ஆட்சியில் மருத்துவக்கல்லூரிகள் இரட்டிப்பாக உள்ளது.

மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒரே சமயத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதற்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைத்தது சாதனையாக இருந்தது. தற்போது எனது சாதனையை முறியடிக்கின்ற வகையில் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: ANI

Tags:    

Similar News