பொதுமக்களிடம் காவல்துறையினர் அணுகும் முறை சிறப்பானது: டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

பொதுமக்களிடம் காவல்துறையினர் அணுகும் போக்கில் நேர்மறையான மாற்றங்கள் தெரிவது பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி டிஜிபி மாநாட்டில் பேசியுள்ளார். இது பற்றிய புகைப்படங்களுடன் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-11-22 05:15 GMT

பொதுமக்களிடம் காவல்துறையினர் அணுகும் போக்கில் நேர்மறையான மாற்றங்கள் தெரிவது பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி டிஜிபி மாநாட்டில் பேசியுள்ளார். இது பற்றிய புகைப்படங்களுடன் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் 56வது டிஜிபிக்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் பின்னர் மாநாட்டில் அவர் பேசும்போது, அடிப்படை காவலை இன்னும் மேம்படுத்த எதிர்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது அவசியமாகிறது.

மேலும், மாநிலங்களுக்கு இடையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலமாக நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் பயன்பெறுவார்கள் என்றார். அது மட்டுமின்றி தற்போது பொதுமக்களிணை அணுகும் காவல்துறையின் போக்கில் நேர்மையான மாற்றங்கள் தெரியவருகிறது பாராட்டுக்குரிய விஷயாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News