பழங்குடியினருக்கான நினைவிடம் தேசிய சின்னம் ஆனது: பிரதமர் மோடி அறிவிப்பு!
ராஜஸ்தானில் ஆங்கிலேயர் ராணுவத்தில் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கான நினைவிடம் தேசிய சின்னம் ஆகிறது பிரதமரின் அறிவிப்பு.
தேசிய சின்னம் அறிவிப்பு:
பிரதமர் மோடி அவர்கள் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மங்கூருக்கு சென்றார். மங்காருக்கு சென்றார் அங்கு 1913 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமையில் போராடிய 1,500 பழங்குடியினரை ஆங்கிலேயர் ராணுவம் கொன்று குவித்தது. அவர்களின் நினைவாக பங்காரில் பழங்குடியினர் நினைவிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தில் நேற்று பிரதமர் மோடி அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.
அவர்களின் நினைவாக மாங்காரில் பழங்குடியினர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் பிரதமர் மோடி பேசிய பொழுது அங்கு நடந்த கூட்டத்தில் ஒரு மேடையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மாங்காய் நினைவிடத்தை பிரதமர் மோடி நினைவுச் சின்னமாக அறிவித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியும் ஆகிய நான்கு மாநிலங்களிலும் மத்திய அரசின் தலைமையில் ஒன்றிணைந்து பாங்கார் நினைவிடத்தை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்த இடத்தில் உலக அளவிலான ஒரு அங்கீகாரம் கிடைக்கும். ஒரு அடையாளம் கிடைக்கும். நாம் அனைவரும் இந்த இடத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வோம். அதற்கு மத்திய அரசு உறுதி எடுத்து இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar